2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் உட்புற படங்களை வெளியிட்டது ஜீப்

 ஜீப் நிறுவனம் முதன் முறையாக மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் உட்புற படங்களையும் வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதன் வெளிப்புற படங்களை ஜீப் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்த மாத  இறுதியில் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட உள்ளது. 

2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் உட்புறம் வெளித்தோற்றத்தை போல அல்லாமல் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய ட்வின் டயல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் என ஏராளமான புதிய அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்றவாறு உட்புறத்தில் அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்போர்ட், சஹாரா மற்றும் ரூபிகார்ன் என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். 

இந்தியாவில் இந்த மாடல் வெளிநாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் இந்த மாடல் வெளிப்பட்டாலும் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 Bhp திறனையும் 460 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடல் தொடர்பான செய்திகளுக்கு மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.