ரூ.38.1 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய ஆடி A4

ஆடி நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட A4 மாடலை ரூ.38.1 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது A4 மாடலின் மற்றொரு மேம்படுத்தப்பட்ட மாடலாக இருந்தாலும் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிய LED  விளக்குகள், 17 இன்ச் அலாய் வீல், புதிய அறுங்கோண வடிவ கிரில் ஆகியாவை கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், சன் ரூப் என ஏராளமான வசதிகள்   கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 150 Bhp  திறனையும் 250 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் 17.84 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. இதன் திறன் 7 ஸ்பீட் கொண்ட S-ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் முன்புற வீலுக்கு  கடத்தப்படுகிறது.

தற்போது இந்த மாடல் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் தான் கிடைக்கும். டீசல் எஞ்சின் மாடல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் BMW  3 சீரீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் C- கிளாஸ் மற்றும் ஜாகுவார் XE போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.