ரூ 3.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய ஹூண்டாய் சேன்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய சேன்ட்ரோ மாடலை ரூ 3.9 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஐந்து வேரியன்ட் மற்றும் ஏழு வண்ணங்களில் கிடைக்கும். மேலும், CNG மற்றும் AMT தேர்விலும் இந்த மாடல் கிடைக்கும். சேன்ட்ரோ மாடல் முதலில் 1998 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது, அதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை ஹூண்டாய் நிறுவனம் சேன்ட்ரோ மாடலை விற்பனை செய்து வந்தது. 

2018 ஹூண்டாய் சேன்ட்ரோ மாடலின் டெல்லி ஷோரூம் விலை விவரம்:

  • Dlite - Rs 3.90 lakhs
  • Era - Rs. 4.25 lakhs
  • Magna - Rs. 4.58 lakhs
  • Sportz - Rs. 5.00 lakhs
  • Asta - Rs. 5.46 lakhs
  • Magna CNG - Rs. 5.24 lakhs
  • Sportz CNG - Rs. 5.65 lakhs
  • Magna AMT - Rs. 5.19 lakhs
  • Sportz AMT - Rs. 5.47 lakhs

ஹூண்டாய் நிறுவனம், சேன்ட்ரோ எனும் பெயரை மட்டும் தான் மீண்டும் பயன்படுத்தியுள்ளதே தவிர இந்த மாடல் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  . இந்த மாடலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என பிரத்தியேக போட்டியை ஹூண்டாய் நிறுவனம் நடத்தி, அதன் மூலம் சேன்ட்ரோ எனும் பெயரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் தயாரிக்கப்பட்டுள்ள அதே HA பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாடலில் எலெக்ட்ரிக்கல் அட்ஜர்ஸ்ட் பின்புற கண்ணாடி, 17.64cm டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற AC வென்ட், உயரம் மாற்றக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு ஆகிய சொகுசு வசதிகளும் காற்றுப்பை, ABS மற்றும் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் 4-சிலிண்டர் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் 69ps திறனையும் 99Nm இழுவைத்திறனையும் மற்றும் CNG வேரியன்ட் 59ps திறனையும் 84Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். இந்த மாடல் மாருதி சுசூகி செலிரியோ, டாடா டியாகோ, ரெனோ க்விட் மற்றும் மாருதி சுசூகி வேகன் R போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.