புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் வெளியிடப்பட்டது

மஹிந்திரா நிறுவனம் புதிய XUV300 காம்பேக்ட் SUV மாடலை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட இருப்பது அனைவரும் அறிந்தது. தற்போது இதன் தொழிநுட்ப விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்பதிவு அனைத்து ஷோரூம்களிலும் மற்றும் இணையதளத்திலும் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலை ரூ 11,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் சாங்யாங் டிவோலி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும். இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பை அப்படியே பயன்படுத்தாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. மேலும் XUV500 மாடல் போல சிறுத்தையை அடிப்படியாக கொண்டு சில மாற்றங்களை வெளிப்புறத்தில் செய்துள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை, சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசல் எஞ்சின் 115bhp திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் இதன் பெட்ரோல் எஞ்சின் 110bhp திறனையும் 200Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் மாடலும் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு, சில்வர் மற்றும் ஆக்வா மரைன் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் W4, W6, W8 மற்றும் W8 (O) என நான்கு வேரியன்ட்டுகளில் வெளியிடப்படும். இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோ ஸ்போர்ட், ஹோண்டா WR-V மற்றும் டாடா நெக்ஸன் போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான SUV மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.