அறிமுகப்படுத்தப்பட்டது ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் ஷகட்டோ

ஆஸ்டன் மார்டின் நிறுவனம் இத்தாலியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் வேன்குவிஷ் ஷகட்டோ   கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது. இது ஆஸ்டன் மார்டின் மற்றும் இத்தாலி யை சேர்ந்த டிசைன் நிறுவனமான ஷகட்டோவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ஐந்தாவது மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் பாரம்பரிய முகப்பு கிரில் மற்றும் ஷகட்டோ நிறுவனத்தின் பாரம்பரிய மேற்கூரை என வடிவமைப்பில் பட்டையை கிளப்புகிறது இந்த  வேன்குவிஷ் ஷகட்டோ கான்செப்ட் மாடல். உட்புறத்தில் விலையுர்ந்த தோல் கவர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஷகட்டோ நிருவனைதை குறிக்கும் வகையில் Z எனும் எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் DB11 மாடலின் வடிவம் ஒரு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் V12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 Bhp  திறனை வழங்கும். இந்த மாடல் முழுவதும் கார்பன் பைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.