வெளிப்படுத்தப்பட்டது புதிய ஆடி A7 ஸ்போர்ட்பேக்

ஆடி நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை A7 ஸ்போர்ட்பேக் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் என்ஜின், தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் என அனைத்திலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கிரில், புதிய மேட்ரிக்ஸ் முகப்பு விளக்குகள் என முற்றிலும் புதிய மாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 4969 மில்லி மீட்டர் நீளமும், 1908 மில்லி மீட்டர் அகலமும், 1422 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2926 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது. மேலும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள பின்புற ஸ்பாய்லர் தானாகவே வாகனத்தின்  வேகம் மணிக்கு 120Kmph தாண்டும் போது வெளியே வரும். வெளியே வரும். பின்புறம் முந்தய மாடல் போலவே கூப் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் முற்றிலும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் A8 மாடலின் பாகங்கள் இந்த மாடலின் உட்புறத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்போடைன்மெண்ட் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் என இரண்டு டச் ஸ்க்ரீன் சிஸ்டம் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. ரிமோட் பார்க்கிங் போன்ற ஏராளமான பிரீமியம் சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் பின்புற டிரைவிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 3.0 லிட்டர்  V6 டர்போ TFSI பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 340Bhp திறனையும் 500Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 250Kmph வேகம் வரையும் 100Kmph வேகத்தை 5.3 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் ஏழு ஸ்பீடு கொண்ட S-Tronic ட்வின் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.