வெளிப்படுத்தப்பட்டது புதிய ஆடி A4 அவன்ட்

ஆடி நிறுவனம் A4 அவன்ட் எஸ்டேட் மாடலை வெளிப்படுத்தியது. இது ஆடி A4 செடான் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஸ்டேட் மாடல் ஆகும். இந்த மாடல் இந்தியாவில் வெளியிட சற்று காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில் ஆடி A4 மாடலே நடந்து முடிந்த டெல்லி வாகன கண்காட்சியில் தான் காட்சிப்படுத்தப்பட்டது.  இந்த A4 செடான் மாடல் வெளியிட்ட பிறகு A4 அவன்ட் மாடல் வெளியிடப்படலாம்.

ஆடி A4 செடான் மாடலின் பின்புறத்தை மட்டும் மாற்றி இந்த A4 அவன்ட் மாடலி உருவாக்கியுள்ளது ஆடி நிறுவனம். உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மற்ற ஆடி கார்களில் கிடைக்கும் அணைத்து வசதிகளும் இதில் கிடைக்கும். இந்த மாடல் 2.0 மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். மேலும் இந்த 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ், 7 மற்றும் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் த்திலும் கிடைக்கும்.

இந்த மாடலில் 505 லிட்டர் பொருள் வைக்க இட வசதி உள்ளது. பின் இருக்கையை மடக்குவதன் மூலம் 1510 லிட்டர் கொள்ளளவு பொருள் வைக்க முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.