ஆடி A5 ரேஞ் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது

ஆடி நிறுவனம் இந்தியாவில் A5 ஸ்போர்ட்பேக், A5 கேப்ரியோலெட் மற்றும் S5 ஸ்போர்ட்பேக் மாடல்களை முறையே ரூ 54.02 லட்சம், ரூ 70.60 லட்சம் மற்றும் ரூ 67.51 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ஆடி நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடும் ஒன்பதாவது மாடல் ஆகும். மேலும் இந்த மாடல்  A4 மற்றும் A6 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.

A5 ஸ்போர்ட்பேக் மற்றும் A5 கேப்ரியோலெட் மாடல்கள் 2.0 லிட்டர் எஞ்சினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 190Bhp (3800-4200pm)  திறனையும் 400Nm (1750-3000rpm) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் ஏழு ஸ்பீட் DSG ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. S5 ஸ்போர்ட்பேக் மாடல் 3.0 லிட்டர் V6 பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 351Bhp (5,500rpm)  திறனையும் 500Nm (2,900rpm) இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் குவாட்ரோ AWD சிஸ்டமும் கிடைக்கும். 

9 வருடங்களுக்குப் பிறகு ஆடி நிறுவனம் இரண்டாம் தலைமுறை A5 மற்றும் S5 மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் டிசைன் மற்றும் என்ஜின் என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் 60 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டுள்ளது. A5 மற்றும் S5 மாடளுக்கும் வடிவத்தில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மற்றும் வோல்வோ S60 போன்ற மாடல்களும் போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.