அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது BMW X2 SUV

BMW நிறுவனம் புதிய X2 SUV யின் தயாரிப்பு நிலை மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் கான்செப்ட் மாடல் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாட்டில் முதலில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

இந்த மாடல் ஒரு கூப் SUV வகையை சேர்ந்தது. முந்தய X2 மாடல்களில் இருந்து இந்த மாடல் நிறைய வேறுபாடுகளை பெற்றுள்ளது. இந்த மாடல் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், சதுர வீல் ஆர்ச், கம்பீரமான பாடி கிளாடிங், இரட்டை புகை போக்கி என சிறப்பான தோற்றத்தை தருகிறது. எப்போதும் போல் இந்த மாடலிலும் BMW நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் கருப்பு நிறத்தில் அனைத்து விதமான சொகுசு வசதிகளும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். இதில் டீசல் எஞ்சின் இரண்டு வித திறனில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் 190Bhp திறனும் 280Nm இழுவைத்திறனும் டீசல் என்ஜின் 190Bhp &400Nm மற்றும் 230Bhp &450Nm என இரண்டு திறன்களிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் இரண்டு வீல் டிரைவ் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடனும் இரண்டு டீசல் என்ஜின் மாடல்களும் BMW நிறுவனத்தின் xDrive எனும் நான்கு வீல் டிரைவ் மற்றும் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டத்துடனும் கிடைக்கும். இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.