100 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தானியங்கி கார் கான்செப்டை வெளியிட்டது BMW

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான BMW  தனது 100 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தானியங்கி கார் கான்செப்டை வெளியிட்டுள்ளது. இதனை விசன் நெக்ஸ்ட் 100 என்று BMW  நிறுவனம் அழைக்கிறது.

இந்த கார் முழுவதும் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பின் அடிப்படியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் கார்பன் பைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த கார் எதிர் கால தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுவதால் ஹைப்ரிட் அல்லது பியூயல் செல் கொண்டதாகவும் இருக்கலாம்.

முன்புறத்தில் எப்போதும் போல் BMW நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் பற்றிய மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.