CES 2016 - பட் - e மைக்ரோ பஸ் கான்செப்டை அறிமுகம் செய்தது வோல்க்ஸ் வேகன்

லாஸ் வேகஸில் நடைபெறும் கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் பட் - e மைக்ரோ பஸ் கான்செப்டை அறிமுகம் செய்தது வோல்க்ஸ் வேகன் நிறுவனம். 1960 மற்றும் 1970 களில் புகழ்பெற்ற ஒரு வேன் மாடலை விற்பனை செய்து வந்தது வோல்க்ஸ் வேகன். தற்போது அதன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் பட் - e மைக்ரோ பஸ் கான்செப்டை அறிமுகம் செய்துள்ளது.

முன்புறத்தில் பெரிய வோல்க்ஸ் வேகன் லோகோ பொறிக்கப்பட்ட கிரில் பின்புறத்தில் முழுவதும் LED விளக்குகள் என அடுத்த தலைமுறை தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் முழுவதும் டச் ஸ்க்ரீனால் ஆன இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலாகவோ அல்லது ஹைப்ரிட் கார் மாடலாகவோ இருக்கும். மேலும் என்ஜின் மற்றும் வெளியிடப்படும் நாள் ஆகியவை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.