விரைவில் வெளியிடப்படும் செவ்ரோலேட் பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா:மேலும் இந்தியா வராது ஸ்பின்

செவ்ரோலேட் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா மாடல்களை வெளியிடும் எனவும் மேலும் இரண்டு வருடத்திற்குள் அனைத்து மாடல்களும் புதுப்பிக்கப்படும்  எனவும் அறிவித்துள்ளது. விரைவில் இந்த பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா மாடல்களில் உற்பத்தி துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களும் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 பீட் ஆக்டிவ் மாடல்  பீட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல் ஆகும். அதேபோல் எஸன்டியா மாடல்  பீட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு காம்பேக்ட் செடான் மாடல் ஆகும். இந்த மாடல்கள் பீட் மாடல் போலவே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜினிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

 பீட் ஆக்டிவ் மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் பின்புறத்தில் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதால் பிளாஸ்டிக் கிலாடிங்குகள், வீல் ஆர்ச் மற்றும் அலாய் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. எஸன்டியா மாடல் பீட் மாடலின் அடிப்படையில் முழுவதும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு காம்பேக்ட் செடான் மாடல் ஆகும்.

செவ்ரோலேட் நிறுவனம் விரைவில் மேம்படுத்தப்பட்ட பீட், ட்ரையல்பிளேசர், குரூஸ் போன்ற மாடல்களையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் செவ்ரோலேட் நிறுவனம் ஸ்பின் MPV  மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது எனவும் அறிவித்துள்ளது. இந்தியாவில் MPV  மாடல்களுக்கு மார்கெட் குறைந்து வருவதால் ஸ்பின் மாடலின் திட்டம் கைவிடப்பட்டதாக செவ்ரோலேட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக காம்பேக்ட் SUV  மற்றும் செடான் போன்ற மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளாதாக அறிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.