26.4 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV

செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் SUV இந்தியாவில் ரூபாய் 26.4 லட்சம் ஷோரூம்  விலையில் வெளியிடப்பட்டது. இது 7 இருக்கை கொண்ட முழுமையான ப்ரீமியம் SUV வகையை சேர்ந்தது. இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மற்றும் மிட்சுபிஷி பஜிரோ மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.  ஆனால் இந்த மாடல் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டதில் மட்டும் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 200 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடன் கிடைக்கும்.  மேலும் இந்த மாடலில் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்கு ஆகியவையும் கிடைக்கும்.

இந்த மாடல்  4878 மில்லி மீட்டர் நீளமும்  1902 மில்லி மீட்டர் அகலமும் 1847 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 231 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது மிக அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.