பீட் அடிப்படையிலான 4 மீட்டருக்கு குறைவான காம்பேக்ட் செடானை வெளியிடும் செவ்ரொலெட்

செவ்ரொலெட் நிறுவனம் பீட் அடிப்படையிலான 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட  காம்பேக்ட் செடானை 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் எனவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் மாருதி சுசுகி டிசைர், டாட்டா செஸ்ட் மற்றும் ஹுண்டாய் எக்சென்ட் போன்ற காம்பேக்ட் செடான் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இந்த மாடல் பீட் மாடலில் உள்ள அதே 1.0 லிட்டர் டீசல்மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலை பல நாட்களாகவே செவ்ரொலெட் சோதனை செய்து வருகிறது ஆனால் இதுவரை எந்த ஒரு படமும் இணையத்தில் கசியவில்லை. இந்த மாடல் பீட் மாடலில்  இருந்து அதிகம் வேறுபட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்ரொலெட் நிறுவனம்  இந்த மாடலுடன் சேர்த்து கேமரோ, கார்வெட், கொலரேடோ மற்றும் ஸ்பின் போன்ற மாடல்களையும்   2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.