நாட்டின் முதன் எலெக்ட்ரிக் வாகன கண்காட்சி டிசம்பர் 24 முதல் தொடங்குகிறது

இந்திய நாட்டின் முதல் எலெக்ட்ரிக் வாகன கண்காட்சி டிசம்பர் 24 முதல் 27 வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இதை தொடங்கி வைக்கிறார். 

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு டெல்லியில் தடை விதித்தது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன கண்காட்சி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.