டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் சிறப்பு பாதிப்பு மாடல்கள் வெளியிடப்பட்டது

டட்சன் நிறுவனம் கோ ஹேட்ச்பேக்   மற்றும் கோ+ MPV மாடல்களின் ஸ்டைல் எனும் சிறப்பு பாதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது. டட்சன் கோ ஸ்டைல் மாடல் ரூ.4.06 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் மற்றும்  கோ+ ஸ்டைல் மாடல் ரூ.4.77 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே இந்த சிறப்பு பாதிப்பு  மாடல் கிடைக்கும்.

இந்த ஸ்டைல் சிறப்பு பாதிப்பு மாடல் புதிய ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும். மேலும் வெளிப்புறத்தில் கிராபிக் ஸ்டிக்கர், ரூப் ரயில், பின்புற ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய இரட்டை வண்ண தேஷ் போர்டு, சில்வர் பினிஷ் கியர் நாப் மற்றும் சென்டர் கன்சோல், சில்வர் சீட் கவர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதிப்பு T வேரியண்ட்டின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும். 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1198cc கொள்ளளவு கொண்ட  1.2 லிட்டர்  பெட்ரோல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன்   பெட்ரோல் எஞ்சின்  68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. 

இதன்  பெட்ரோல்  மாடல்  20.6 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளிதுள்ளது. இந்த கார்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 18 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.