ரூ.3.49 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டட்சன் ரெடி-கோ ஸ்போர்ட் சிறப்பு பாதிப்பு மாடல்

டட்சன் நிறுவனம்  ரெடி-கோ மாடலின் சிறப்பு பாதிப்பு மாடலான ரெடி-கோ ஸ்போர்ட் மாடலை ரூ.3.49 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது.  இந்த புதிய சிறப்பு பாதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக சில உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ரேஸிங் கார்களில் இருப்பது போல கோடுகள், கருப்பு வண்ணத்திலான வீல் கவர், பாடி கிராபிக்ஸ் மற்றும் கருப்பு வண்ணத்திலான க்ரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ரூபி, வெள்ளை மற்றும் க்ரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய கருப்பு வண்ணத்திலான உட்புற வடிவமைப்பு, ஆங்காங்கே சிவப்பு வண்ணத்திலான அலங்காரம், புதிய ப்ளூ டூத் கொண்ட மியூசிக் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இது 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த  காரின் பெட்ரோல்  என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 16 முதல் 20 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இதன் பெட்ரோல்  என்ஜின் மாடல் அதிக பட்சமாக மணிக்கு  130 முதல் 135 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.     

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.