அறிமுகப்படுத்தப்பட்டது டட்சன் ரெடி கோ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் ரெடி கோ மாடல் இன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலுக்கும் இதற்கும் ஏதும் பெரிய மாற்றங்கள் இல்லை. இதன் முன்பதிவு மெய் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்படும். இதன் வெளியீடு ஜூன் முதல் வாரத்தில் இருக்கும்.

இந்த மாடலும் ரெனால்ட் க்விட் மாடலின் பிளாட்பாமில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த மாடல் வித்தியாசமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. LED  விளக்குகள், பனி விளக்குகள், பின்புற ஸ்பாய்லர், அறுங்கோண முன்புற கிரில், பூமராங் வடிவிலான பின்புற விளக்குகள், அலாய் வீல் ஆகியவை  இந்த மாடலில்  கொடுக்கப்பட்டுள்ளது.  இது ஒரு ஆரம்ப நிலை மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலில் நிறைய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் டட்சன் நிறுவனம் கான்செப்ட் மாடலில் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளது.  உட்புறம் மற்ற டட்சன் மாடல்களை போலவே தான் உள்ளது.

இந்த மாடலில் ரெனால்ட் க்விட் மாடலில் உள்ள 0.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 53 Bhp  திறனையும் 72 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2.5 முதல் 4 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.