இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபெர்ராரி 812 சூப்பர் பாஸ்ட்

ஃபெர்ராரி நிறுவனம் 812 சூப்பர் பாஸ்ட் மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ரூ 5.20 கோடி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2017 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் பெர்ராரி நிறுவனத்தின் 70 வது ஆண்டுவிழா நினைவாக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த மாடல் F12 பெர்லினிட்டா மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

இந்த மாடலில் 6.5 லிட்டர்  நேச்சுரலி ஆஸ்ப்பிரேடெட் V12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 799 Bhp திறனையும் 718 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இதன் திறன் ஏழு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் பின்புற வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 340 கிலோமீட்டர் வேகம் வரையும் நூறு கிலோமீட்டர் வேகத்தை 2.9 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது.

இந்த மாடலில் உட்புறம் வெளிப்புறம் என ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பாடி பேனல், LED முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் என வெளிப்புறத்திலும் டேஸ் போர்டு, ஸ்டேரிங் வீல் என உட்புறத்திலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மிகச்சிறப்பான ஏரோ டைனமிக் செயல்திறன் கொண்ட மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.