ஃபியட் அர்கோ மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டது

ஃபியட் நிறுவனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அர்கோ மாடலின் படங்களை அதிகாப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மாடல் புன்டோ எவோ மாடலுக்கு மாற்றாக வெளியிடப்படும். ஃபியட் நிறுவனம் புன்டோ எனும் பெயருக்கு பதில் அர்கோ எனும் பெயரை மாற்றியுள்ளது.

இந்த மாடலில் ஃபியட் டிபோ மாடலின் வடிவமைப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில்  ஃபியட் நிறுவனத்தின் புதிய தலைமுறை க்ரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒரு சில நாட்களில் பிரேசிலில் வெளியிடப்படும் ஆனால் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எனினும் இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் பிரேசிலில் 1.0 லிட்டர், 1.3 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும். இந்தியாவில் இந்த மாடல் வெளியிடப்பட்டால் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.