ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஃபியட் டிபோ ஹேட்ச் பேக் மற்றும் எஸ்டேட்

கடந்த வருடமா அறிமகம் செய்யப்பட்ட டிபோ சேடன் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டிபோ ஹேட்ச் பேக் மற்றும் டிபோ எஸ்டேட் மாடல்களை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது  ஃபியட் நிறுவனம்.  இதன் ஹேட்ச் பேக்  மாடல் 4370 மில்லி மீட்டர் நீளமும், 1790 மில்லி மீட்டர் அகலமும் மற்றும் 1500  மில்லி மீட்டர்  உயரமும்  கொண்டது. இதன் எஸ்டேட் மாடல் 4570 மில்லி மீட்டர்  நீளம் கொண்டது.

இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1.3 மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டதிலும் கிடைக்கும். உட்புறத்தில்  டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மேலும் ஃபியட் மாடலில் உள்ள அணைத்து சிறப்புகளும் இதிலும் உள்ளது.

இந்த மாடல்கள்   இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும். இந்தியாவில் தற்போது தான் டிபோ செடான் மாடலை வெளியிடுவதற்கான முயற்சிகளை பியட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனவே இந்த  டிபோ ஹேட்ச் பேக் மற்றும் எஸ்டேட் மாடல்கள் இந்தியாவில் வெளியிட சிறிது காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.