ரூ 7.31 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட  ஈக்கோஸ்போர்ட் மாடலை ரூ 7.31 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. சில ஒப்பனை மாற்றங்கள், புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் ஏற்கனவே சென்னை ஆலையில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்புறத்தில் போர்டு நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய க்ரில், புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது மேலும் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. உட்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புதிய சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் என முழுவதுமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எனின்களில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 123Bhp @6500rpm திறனையும் 150Nm @4500rpm  இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் இதன் டீசல் எஞ்சின் 100Bhp @3750rpm திறனையும் 205Nm @1750-3250rpm  இழுவைத்திறனையும் வழங்கும். இரண்டு என்ஜின்களும் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். மற்றும் பெட்ரோல் எஞ்சின் மட்டும் கூடுதலாக ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். இந்த மாடல் தற்போது 1.0  லிட்டர் ஈக்கோ பூஸ்ட் எஞ்சினில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாடல் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸா, மஹிந்திரா TUV300 மற்றும் புதிய டாடா நெக்ஸன் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வேரியன்ட் வாரியாக புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலின் டெல்லி ஷோரூம் விலை விவரம்:

பெட்ரோல்

  • Ambiente - ரூ 7.31 லட்சம்
  • Trend - ரூ 8.04 லட்சம்
  • Trend+ AT - ரூ 9.34 லட்சம்
  • Titanium - ரூ 9.17 லட்சம்
  • Titanium+ AT - ரூ 10.99 லட்சம்

டீசல்

  • Ambiente - ரூ 8.01 லட்சம்
  • Trend - ரூ 8.71 லட்சம்
  • Trend+ - ரூ 9.10 லட்சம்
  • Titanium - ரூ 9.85 லட்சம்
  • Titanium+ - ரூ 10.67 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.