ஃபோர்டு ஃபிகோ கிராஸ் சோதனை ஓட்டப் படங்கள் கசிந்தது

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் சோதனை செய்து வரும் ஃபிகோ கிராஸ் மாடலின் சோதனை ஓட்டப் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் மார்ச் 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தற்போது இந்த மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது ஃபோர்டு நிறுவனம். இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வடிவமைப்பில் ஒரு கிராஸ் ஓவர் போன்ற தோற்றத்தை தருவதற்காக பிளாஸ்டிக் கிளாடிங்குகள் மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர்  பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது டொயோடா எட்டியோஸ் கிராஸ், பியட் அர்பன் கிராஸ், வோல்க்ஸ்வேகன் போலோ கிராஸ் மற்றும் ஹூண்டாய் ஆக்டிவ் i20 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

Source:CarAndBike.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.