ஜனவரி 31 ஆம் தேதி வெளிப்படுத்தப்படும் ஃபோர்டு ஃபிகோ கிராஸ்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் இறுதியாக ஃபிகோ கிராஸ் மாடல் ஜனவரி 31 ஆம் தேதி இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் சோதனை ஒட்டப்படங்கள் ஏற்கனவே நிறைய முறை இணையத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய  ஃபோர்டு ஃபிகோ கிராஸ் மாடலின் வெளிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், புதிய கருப்பு நிற கிரில், புதிய 15 இன்ச்  அலாய் வீல், புதிய ரூப் ரயில் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம்  ஃபிகோ மாடல் போல அல்லாமல் புதிய வடிவமைப்பு கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இந்த மாடல் ரூ 5.5 லட்சம் முதல் ரூ 9 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் i20  ஆக்டிவ், பியட் அவென்ச்சுரா மற்றும் வோல்க்ஸ் வேகன் போலோ கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.