நாளை வெளியிடப்படுகிறது மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு - ஃபிகோ

ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின்  வெற்றியை  தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஃபிகோ மாடலை நாளை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது. இது பழைய ஃபிகோ மாடலுக்கு மாற்றாக இருக்கும் மேலும்  பழைய ஃபிகோ மாடல் விற்பனை நிறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் ஃபோர்டு - ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடென் மாடலின் ஹேட்ச்பேக் மாடல் என்பதால் ஃபிகோ ஆஸ்பயர் காருக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. இந்த மாடலும் ஃபிகோ ஆஸ்பயர் போலவே 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர்  பெட்ரோல்  என்ஜின், மற்றும்  1.5 லிட்டர் டீசல்  என்ஜின் என மூன்று என்ஜினில் கிடைக்கும்.  இதன் 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும். 

இதன்  1.2 லிட்டர்  பெட்ரோல்  எஞ்சின்  88 bhp (6300 rpm) திறனும் 112Nm (4000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், 1.5 லிட்டர் பெட்ரோல்  எஞ்சின்  112 bhp (6300 rpm) திறனும் 136Nm (4250 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் 1.5 லிட்டர் டீசல்  எஞ்சின்  100 bhp (3750 rpm) திறனும் 215Nm (1750-3000 rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.

மேலும் இந்த மாடல் ஃபிகோ ஆஸ்பயர் மாடலில் இருந்து 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விலை குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஹோண்டா - ப்ரியோ, டாடா - போல்ட் மற்றும் மாருதி சுசுகி - ஸ்விப்ட் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.