புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை வெளிப்படுத்தியது ஃபோர்டு இந்தியா

ஃபோர்டு இந்தியா நிறுவனம் புதிய மூன்று சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய எஞ்சின் முந்தய நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை விட 10 சதவீதம் அதிக திறனும் 7 சதவீதம் அதிக இழுவைத்திறனும் கொண்டது. 

1,497cc கொள்ளளவு கொண்ட இந்த புதிய மூன்று சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் Ti-VCT பெட்ரோல் எஞ்சின் 123PS @ 6,500 rpm திறனையும் 150Nm @ 4,500 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த எஞ்சின் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் அல்லது ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். மேலும் இந்த எஞ்சின் முந்தய நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை விட 10 சதவீதம் குறைவான அளவு கொண்டது. இந்த எஞ்சின் எரிபொருள் சிக்கனம், மாசுக்கட்டுப்பாடு மற்றும் NVH என அனைத்திலும் சிறந்ததாக இருக்கும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த எஞ்சின் விரைவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட் மாடலில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எஞ்சின் ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.