அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளிப்படுத்தப்பட்டது ஃபோர்டு - முஸ்டங்

ஃபோர்டு  நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக  முஸ்டங் மாடலை வெளிப்படுத்தியது. மேலும் இந்த மாடல் இந்த ஆண்டு முதல் அரை இறுதிக்குள்  வெளியிடப்படும் எனவும் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மாடல்களில் ஃபோர்டு - முஸ்டங் மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடர்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு கூப் வடிவினாலான மாடல். இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டது. இந்த மாடலில் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் என அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

இந்த மாடல் உலக அளாவில் மூன்று விதமான என்ஜினில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் 5.0 லிட்டர் V8 பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 437 Bhp திறனும் 540 இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ரூ.80 முதல் 85 லட்ச விலை கொண்டதாக வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.