புத்தம் புதிய ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியது ஃபோர்டு

ஃபோர்டு இந்தியா நிறுவனம் இறுதியாக ஃபிகோ மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை ஒட்டப்படங்கள் ஏற்கனவே நிறைய முறை இணையத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் இந்த வருட மத்தியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புற தோற்றத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஃபோர்டு ஃபிரீஸ்டைல் கிராஸ் மாடலின் வெளிப்புறத்தில் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், புதிய கருப்பு நிற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல், புதிய ரூப் ரயில் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் அமைப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் ஃபிகோ மாடல் போல அல்லாமல் புதிய வடிவமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய முகப்பு கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ஆறு காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, ESC, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரிவென்ஷன் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இந்த மாடல் ஹூண்டாய் i20 ஆக்டிவ், பியட் அவென்ச்சுரா மற்றும் வோல்க்ஸ் வேகன் போலோ கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.