48,700 ஈக்கோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம் எரிபொருள் மற்றும் ப்ரேக் லைனின் பன்டில் கிளிப்பில் உள்ள பிரச்சனை மற்றும் பின்புற இருக்கையின்  மவுண்டிங் போல்டில் உள்ள பிரச்சனை என இரண்டு காரணங்களுக்காக 48,700 ஈக்கோஸ்போர்ட் கார்களை திரும்ப அழைக்கிறது. இது தொடர்பாக ஃபோர்டு நிறுவனமே நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறது. 

ஏப்ரல் 2013 முதல் ஜூன் 2014 வரை தயாரிக்கப்பட்ட சுமார் 48,000 கார்களில் எரிபொருள் மற்றும் ப்ரேக் லைனின் பன்டில் கிளிப்பில் பிரச்சனை இருப்பதாகவும் அதேபோல் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தயாரிக்கப்பட்ட சுமார் 700 கார்களில் பின்புற இருக்கையின்  மவுண்டிங் போல்டில் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த வாடிக்கையாளரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும் விபத்துகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த பிரச்சனைகள் ஃபோர்டு நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும்  இலவசமாக சரி செய்து தரப்படும். உங்கள் காரும் இந்த லிஸ்டில் உள்ளதா  என்பதை அருகில்  உள்ள ஷோரூம்களிலும் தெரிந்து கொள்ளுங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.