ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: போர்ஷே மிசன் E காட்சிப்படுத்தப்பட்டது

போர்ஷே நிறுவனம் ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் மிசன் E எனும் முதல் எலெக்ட்ரிக் செடான் காரை அனைவரையும் எதிர்பாராத விதத்தில் காட்சிப்படுத்தியது.  இந்த மாடலில் 600 ps திறனை வழங்கும் மின் மோட்டர் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் முழுமையாக சார்ஜ் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் ஆல் வில் டிரைவ் சிஸ்டமும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டமும் கிடைக்கும்.  உட்புறம் உள்ள இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் முழுவதும் LED டிஸ்ப்ளேயில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.