ஜெனிவா மோட்டார் கண்காட்சி 2017: காட்சிப்படுத்தப்பட்டது அடுத்த தலைமுறை சுசூகி ஸ்விப்ட்

சுசூகி நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலை தற்போது நடைபெற்று வரும்  ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஜப்பானில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது கடந்த ஜனவரி மாதம் தான் விற்பனை தொடங்கப்பட்டது. இந்த மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

முன்புறத்தில் புதிய அருங்கோன வடிவ கிரில், புதிய முகப்பு விளக்குகள், புதிய பனி விளக்கு அறை மற்றும் பின்புறத்தில் புதிய பின்புற விளக்குகள் என முற்றிலும் புதிய தோற்றத்தை தருகிறது. மேலும் பக்கவாட்டு கோடுகளும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் கதவுக்கான கைப்பிடிகள் விண்ட்  சீல்டில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் டேஸ் போர்டு, ஸ்டீரிங் வீல் என முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடுத்த தலை முறை ஸ்விப்ட் மாடல்  அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டீசல் மாடல்   SHVS  எனும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.