மார்ச் 3 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனம் மார்ச் 3 ஆம் தேதி இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட அமேஸ் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  காம்பேக்ட் செடான்  மார்கெட்டில் பெருகி வரும் போட்டியை சமாளிக்க ஹோண்டா நிறுவனம் சில ஒப்பனை மாற்றங்களை செய்து இந்த மேம்படுத்தப்பட்ட அமேஸ் மாடலை வெளியிட இருக்கிறது. 

இணையத்தின் கசிந்துள்ள படத்தின் படி பார்த்தல் முன்புற கிரில்மற்றும் புதிய பம்பர் என சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களிலேயே  கிடைக்கும். 

இதன்  பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல் என்ஜின்  மாடல் 73 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கும். விலையிலும் அதிக மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி:GaadiWaadi.com 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.