9,000 முன்பதிவுகளை கடந்தது ஹோண்டா BR-V

ஹோண்டா  BR-V மாடல் வெளியிடப்பட்டு தோராயமாக ஒரு மாதம் ஆனா நிலையில் தற்போது முன்பதிவு விவரங்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 9,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாகவும் மேலும் இரண்டு மாதம் வரை காத்திருப்பு காலம் நீடிக்கும் எனவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செக்மெண்டில் உள்ள மற்ற மாடல்களின் விற்பனையுடன் ஒப்பிடும் போது இது சற்று குறைவு தான். 

ஹோண்டா நிறுவனம் BR - V மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் ப்ரியோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் பெரிய குரோம் கிரில், பனி விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம் பார்பதற்கு CR-V போல் தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் ப்ரியோ, அமேஸ் மற்றும் மொபிலியோ போன்ற மாடலில் உள்ள அதே வடிவமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் LED விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு, பெர்ல் வெள்ளை, வெள்ளை, பிரவுன், சில்வர் மற்றும் மெட்டாலிக் என 6 வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு கொண்டதாக உள்ளது. இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 119 bhp (6600 rpm) திறனும் 145Nm (4600rpm) டார்க் எனும் இழுவைதிறனும், டீசல் என்ஜின் மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் பெட்ரோல் மாடலில் மட்டும் CVT ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும்.

இந்த மாடல் ஹுண்டாய் க்ரெடா, மற்றும் ரெனால்ட் டஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.