ரூ.4.69 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ப்ரியோ

இறுதியாக ஹோண்டா நிறுவனம்  மேம்படுத்தப்பட்ட  ப்ரியோ மாடலை ரூ.4.69 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹேட்ச் பேக் மாடல் என்பதால் முன்புறம் அப்படியே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறத்தில் புதிய முன்புற கிரில், புதிய பம்பர், புதிய பனி விளக்குகள் மற்றும் புதிய பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் புதிய டேஸ் போர்டு, புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், புதிய குளிரூட்டி வெண்ட் மற்றும் தானியங்கி குளிரூட்டி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும்  இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல்   என்ஜினில் தான் கிடைக்கும். இந்த பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.