சிட்டி, அக்கார்டு மற்றும் ஜாஸ் கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் டகடா காற்றுப்பையில் உள்ள பிரச்னை காரணமாக 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிட்டி, அக்கார்டு மற்றும் ஜாஸ் கார்களை தானாக முன்வந்து திரும்ப அழைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் மொத்தமாக 510 அக்கார்டு கார்கள், 240 ஜாஸ்  கார்கள் மற்றும் 22,084 சிட்டி கார்களை திரும்ப அழைத்துள்ளது.

உங்கள் காரும் இந்த லிஸ்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உங்கள் வாகனத்தின் வின் எண்ணை ஹோண்டா நிறுவனத்தின் இணையத்தில் ஒப்பிட்டு அல்லது அருகில் உள்ள ஷோரூமை  தொடர்பு கொள்ளுங்கள். மேலும் ஹோண்டா நிறுவனமே பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

டகடா காற்றுப்பை இன்பிலேட்டரில் உள்ள பிரச்னை காரணமாக அழுத்தம் அதிகரித்து காற்றுப்பை தானாக விரிந்து கொள்ளும். இதனால் வாகனத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டகடா காற்றுப்பை பிரச்னை காரணமாக BMW, போர்டு, டொயோட்டா  மற்றும் மாஷ்டா என ஏராளமான நிறுவனங்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை திரும்ப அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.