ஆசியாவிற்கான 10 ஆம் தலைமுறை ஹோண்டா சிவிக் மாடல் வெளிப்படுத்தப்பட்டது

ஆசிய கண்டத்திற்கான  10 ஆம் தலைமுறை ஹோண்டா சிவிக் மாடல் வெளிப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கான 10 ஆம் தலைமுறை ஹோண்டா சிவிக் மாடல் வட அமெரிக்காவில் வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடளுக்கும் இடையே  பெரிய வித்தியாசங்கள் எது சொல்லிக்கொள்ளும்படி இல்லை.




பழைய சிவிக் மாடலுடன் ஒப்பிடும் பொது தற்போது உள்ள மாடல் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு நிறைய அம்சங்களை பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கூப் மாடலின் வடிவத்தின் மிகவும் அழகான தோற்றத்தை தருகிறது. இது ப்ரீமியம் செடான் செக்மெண்டில் வருவதால் அணைத்து விதமான வசதிகளும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும்.

இந்த மாடல் 1.8 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் CVT எனும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். பிலிபைன்சில் இந்த மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது ஆனால் இந்தியாவில் எப்போது இந்த மாடல் வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.