WR-V காம்பேக்ட் SUV மாடலை வெளிப்படுத்தியது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் பிரேசிலில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட WR-V காம்பேக்ட் SUV  மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் முதலில் பிரேசிலில் வெளியிடப்படும் அதை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்புறம் பெரிய கிரில், பெரிய பம்பர் மற்றும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள் ஆகியவற்றுடன் ஒரு SUV  போன்ற  தோற்றத்தை தருகிறது. ஆனால் பக்கவாட்டு வடிவமைப்பு மற்றும் பின்புற வடிவமைப்பு அப்படியே ஜாஸ் போலவே உள்ளது. இந்த மாடலில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் வடிவங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சின் மற்றும் உட்புற வடிவமைப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. எனினும்  இந்த மாடலில் ஜாஸ் மாடலில் உள்ள அதே எஞ்சின் தான் பொருத்தப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மாடல் போர்ட் ஈக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா TUV300  மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா போன்ற மாடலுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.