ரூ. 5.29 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனம்  மேம்படுத்தப்பட்ட அமேஸ் மாடலை ரூ. 5.29 லட்சம் டெல்லி  ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் செடான்  மார்கெட்டில் பெருகி வரும் போட்டியை சமாளிக்க ஹோண்டா நிறுவனம் சில ஒப்பனை மாற்றங்களை செய்து இந்த மேம்படுத்தப்பட்ட அமேஸ் மாடலை வெளியிட்டுள்ளது.

வெளிப்புறத்தில் புதிய முன்புற கிரில், புதிய பம்பர், புதிய பனி விளக்குகள் மற்றும் புதிய பின்புற விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் புதிய டேஸ் போர்டு, புதிய இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், புதிய குளிரூட்டி வெண்ட் மற்றும் தானியங்கி குளிரூட்டி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் கூடுதலாக ப்ளூ வண்ணத்திலும் கிடைக்கிறது.

என்ஜினில் எந்த மாற்றமும்  இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன்  பெட்ரோல் என்ஜின் 88 bhp (6000 rpm) திறனும் 109Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  டீசல் என்ஜின்  மாடல் 73 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசனும் கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:

ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மாடல்கள்
E MT - Rs 5.29 லட்சம்
S MT - Rs 5.95 லட்சம்
SX MT- Rs 6.80 லட்சம்
VX MT - Rs 7.19 லட்சம்
S CVT - Rs 7.19 லட்சம்
VX CVT - Rs 8.19 லட்சம்

ஹோண்டா அமேஸ் டீசல் மாடல்கள்
E MT - Rs 6.41 லட்சம்
S MT - Rs 7.29 லட்சம்
SX MT - Rs 7.82 லட்சம்
VX MT - Rs 8.19 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.