ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் ஹுண்டாய் க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடல்

ஹுண்டாய் நிறுவனம் க்ரெடா மாடலின் முதலாமாண்டு நிறைவுவிழாவை கொண்டாடும் விதமாக  க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடலை ஜூலை 7 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடலில் கிராபிக்ஸ் மற்றும் சில ஒப்பனை வேலைபாடுகள் மட்டும் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹுண்டாய் நிறுவனம் க்ரெடா SUV  மாடல் மூலம் மிகப்பெரும் விற்பனையை பதிவு செய்து வருகிறது. சிறந்த வடிவமைப்பு சிறந்த செயல்திறன் என அனைத்திலும் சிறந்து விளங்குவதால் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவின் சிறந்த SUV  தயாரிப்பாளரான மகிந்திராவையே பின்னுக்கு தள்ளியது ஹுண்டாய் க்ரெடா. 

இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1591CC கொள்ளளவும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் மற்றும்1.6 லிட்டர் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது. 

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மாடல்  15.29 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.38 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.67 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.01 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 7 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளிலும்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, ப்ளூ, பீஜ் மற்றும் கிரே என மொத்தம் 7 வண்ணங்களிலும் கிடைகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.