வெளிப்படுத்தப்பட்டது ஹுண்டாய் க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடல்

ஹுண்டாய் நிறுவனம் க்ரெடா மாடலின் முதலாமாண்டு நிறைவுவிழாவை கொண்டாடும் விதமாக  க்ரெடா ஆண்டுவிழா சிறப்பு பதிப்பு மாடலை பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலில் புதிய  கிராபிக்ஸ், புதிய இரட்டை வண்ணம், ஆண்டுவிழா பேட்ச்   மற்றும் சில ஒப்பனை வேலைபாடுகள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. உட்புறமும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். 

ஹுண்டாய் நிறுவனம் க்ரெடா SUV  மாடல் மூலம் மிகப்பெரும் விற்பனையை பதிவு செய்து வருகிறது. சிறந்த வடிவமைப்பு சிறந்த செயல்திறன் என அனைத்திலும் சிறந்து விளங்குவதால் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவின் சிறந்த SUV  தயாரிப்பாளரான மகிந்திராவையே பின்னுக்கு தள்ளியது ஹுண்டாய் க்ரெடா. 

இந்த மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 1.4  & 1.6 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1591CC கொள்ளளவும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1396CC கொள்ளளவும் மற்றும்1.6 லிட்டர் டீசல் என்ஜின் 1582CC கொள்ளளவும் கொண்டது. 

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜினின் மாடல்  15.29 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல் என்ஜின் மாடல் 21.38 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1900-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்   மாடல்  19.67 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிசன்   மாடல்  17.01 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.