ஹூண்டாய் கிராண்ட் i10 மாடலின் விலை 3 சதவீதம் உயர்த்தப்பட்டது

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 மாண்டலின் விலையை 3 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு உற்பத்தி பொருளின் விலை உயர்வால் செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 3 சதவீதம் விலை உயர்த்தப்படுவதாக மட்டுமே அறிவித்துள்ளது. வேரியன்ட் வாரியான விலை விவரங்களை வெளியிடவில்லை. தோராயமாக இதன் விலை ரூ 14,000 முதல் ரூ 23,000 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 83 BHP திறனையும் 114 NM இழுவைத்திறனையும் வழங்கும். டீசல் மாடல் 75 BHP திறனையும் 190 NM இழுவைத்திறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சிலும் டீசல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் வட்ட வடிவ பனி விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் வேரியன்ட் வாரியான புதிய விலை விவரங்களை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.