அடுத்த தலைமுறை வெர்னா மாடலை வெளிப்படுத்தியது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் அடுத்த தலைமுறை வெர்னா மாடலை மாடலை சீனாவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு செங்டு மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இந்த மாடல் சீனாவில் ஒரு சில மாதங்களிலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்புறத்தில் எலன்ட்ரா மாடலில் இருப்பதை போன்றே  புதிய அறுங்கோண வடிவ க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்திலும் எலன்ட்ரா மாடலின் வடிவம் சற்று பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் இல்லை. இந்த புதிய அடுத்த தலைமுறை மாடல் 28 மிமீ அதிக அகலமும் 30 மிமீ அதிக வீல் பேஷும் கொண்டது. உட்புறம் முழுவதும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.4 மற்றும் 1.6 லிட்டர் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் தான் கிடைக்கும். கூடுதலாக 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷன் சிஸ்டத்துடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.