டூஷன் SUV மாடலின் வரைபடங்களை வெளியிட்டது ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் டூஷன் SUV  மாடலின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் டூஷன் SUV  மாடலை இந்தியாவில் வரும்  நவம்பர் 14 ஆம் தேதி வெளியிட உள்ளது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஒரு சில டீலர்களிடம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இதன் முன்பதிவு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை. ஹூண்டாய் நிறுவனம் டூஷன் SUV  மாடலை இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசல் என்ஜின் 185 Bhp  திறனையும்  400 நம் இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இதன் பெட்ரோல் என்ஜின் 152 Bhp  திறனையும் 192 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இதன் இரண்டு எஞ்சினுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸமிஷனில் கிடைக்கும். 

கடந்த மாதம் தான் புதிய எலன்ட்ரா    மாடலை வெளியிட்ட நிலையில் அதற்குள் அடுத்த மாடலை வெளியிட தயாராகி வருகிறது ஹூண்டாய். டூஷன் மாடல் கிரெடா மற்றும் சாண்டாபி மாடலுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும். மேலும் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.