ரூ.68.4 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஜாகுவார் F-பேஸ் SUV

ஜாகுவார் நிறுவனம் மிகவும் வித்தியாசமான மற்றும் மிகப்பெரிய நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் F-பேஸ் SUV மாடலை ரூ.68.4 லட்சம் ஆரம்ப விலையில்  வெளியிட்டது. இதன் கான்செப்ட் மாடல் மூன்று வருடங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் பியூர், ப்ரஸ்டீஜ், R-ஸ்போர்ட் மற்றும் பர்ஸ்ட்  எடிசன் என நான்கு வேரியண்டுகளில் கிடைக்கிறது.

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:
ஜாகுவார் F-பேஸ் 2.0 லிட்டர் டீசல் - பியூர் - ரூ.68.4 லட்சம்
ஜாகுவார் F-பேஸ் 2.0 லிட்டர் டீசல்- ப்ரஸ்டீஜ் - ரூ.74.5 லட்சம்
ஜாகுவார் F-பேஸ் 3.0 லிட்டர் டீசல்- R-ஸ்போர்ட் -  ரூ.1.02 கோடி
ஜாகுவார் F-பேஸ் 3.0 லிட்டர் டீசல் - பர்ஸ்ட் எடிசன் - ரூ.1.12 கோடி

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல், பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு விதமான திறன் என நன்கு விதமான என்ஜின் ஆப்சன்களில் உலகளவில் கிடைக்கிறது. இதன் அனைத்து மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 180 bhp  திறனையும், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 240 bhp  திறனையும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 340 bhp  திறனையும் மற்றும் 380 bhp  திறனையும் வழங்கும். அனால் இந்தியாவில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர்  டீசல் எஞ்சின் மாடல் மட்டுமே வெளியிடப்பட உள்ளது.

இந்த மாடல் இலகு எடை கொண்ட அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிக சிறப்பான கையாளுமையையும், சொகுசான பயண அனுபவத்தையும் தரும் என ஜகுவார் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால் கரடு முரடான சாலைகளிலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறியுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.