இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்பட்டது ஜாகுவார் XE மற்றும் XF

ஜாகுவார் நிறுவனம் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய XE மற்றும் XF செடான் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. XE மற்றும் XF மாடல்கள் ஏற்கனவே போர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது ஜாகுவார் நிறுவனம் முந்தய என்ஜினுக்கு பதிலாக 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் இரண்டு வித திறன்களில் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த திறன் கொண்ட என்ஜின் 200bhp  திறனும் 320Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. அதேபோல் அதிக திறன் கொண்ட என்ஜின் 250bhp  திறனும் 365Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு என்ஜின் மாடல்களும் எட்டு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். 

போர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட முந்தய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 237 bhp/340Nm செயல்திறனிலும், 200PS/320Nm செயல்திறனிலும்  வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல்கள் 2.0 லிட்டர் இன்ஜெனியம் டீசல் என்ஜினுடனும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.