ரூ.24 கோடிக்கு விற்கப்பட்ட ஜேம்ஸ் பாண்டின் ஆஸ்டன் மார்டின் DB10

ஜேம்ஸ் பாண்டின் 24 வது படமான ஸ்பெக்டர் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன்  மார்டின் DB10 கார் ரூ.23.9 கோடிக்கு ஏலம் போனது. ஸ்பெக்டர் படத்திற்காக மொத்தம் 10 ஆஸ்டன்  மார்டின் DB10 கார்களை பிரத்தியேகமாக தயாரித்தது ஆஸ்டன்  மார்டின் நிறுவனம். அவற்றில் ஒரு காரை மட்டும் ஒரு தொண்டு நிருவனதிற்காக ஏலம் விட்டது. 9 முதல் 15 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்த்தனர் ஆனால் இந்த கார் ரூ.23.9 கோடிக்கு ஏலம் போனது. இந்த பணம் அணைத்து ஒரு தொண்டு நிருவனதிற்காக கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் இயக்குனர் சாம் மென்டெஸ் நிறைய மாடல்களின் பாடங்களை பார்த்த பிறகு இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. சுறாவின் வடிவத்தினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய மாடல். இந்த மாடலில் 4.8 லிட்டர் V 8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 313 Bhp திறனையும் 470 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.ரோம் நகர வீதிகளில் ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரேக் ஆஸ்டன்  மார்டின் DB 10 காரிலும் நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் டேவிட் பாடிஸ்டா C-X75 சூப்பர் காரிலும் மோதும்  ஒரு சேசிங் காட்சியை நாம் அனைவரும் ஸ்பெக்டர் படத்தில்  பார்த்திருப்போம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.