ரூ 20.59 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன்

ஜீப் நிறுவனம் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலை ரூ 20.59 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடல் அணைத்து வசதிகளும் கொண்ட Limited (O) வேரியன்டில் டீசல் எஞ்சின் உடன்  மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்:

  • டிஸ்டின்க்டிவ் கருப்பு நிற அலாய் வீல்
  • ஸ்டைலிஷ் கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி 
  • பிரீமியம் கருப்பு நிற உட்புறம் 

ஜீப் காம்பஸ் பிளாக் பேக் எடிசன் மாடல் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின் 173Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும். ஜீப் காம்பஸ் மாடலை வெளியிட்ட பிறகு தான் பியட் நிறுவனத்தின் விற்பனை மிக அதிகமாக வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஜீப் நிறுவனம் அதிக வசதிகள் கொண்ட Limited Plus வேரியன்ட்டை விரைவில் வெளியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.