ரூ. 3.89 கோடி விலையில் வெளியிடப்பட்டது லம்போர்கினி ஹுரகேன் ஸ்பைடர்

லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ரூ.3.9 கோடி விலையில்  ஹுரகேன் ஸ்பைடர் மாடலை வெளியிட்டுள்ளது. லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே ஹுரகேன் சீரியஸில் LP610-4 மற்றும் LP580-2 எனும் இரண்டு வேரியண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது  ஹுரகேன் ஸ்பைடர் எனும்  கன்வெர்டிப்ல் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 5.2 லிட்டர் கொண்ட V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 610 Bhp திறனையும் 560 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மனிக்கு 324 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடலின் மேற்கூரையை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் திறந்து மூட முடியும். அதுவும் வெறும் 17 வினாடிகளுக்குள் அதை செய்து விடலாம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.