லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் வெளியிடப்பட்டது

லேன்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை இந்தியாவில் 46.1 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டது. இந்த மாடல் மொத்தம் 4 வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 5 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாகவும் வெளியிடப்ப்பட்டுள்ளது.

இந்த மாடல் டிஸ்கவரி விசன் மற்றும் லேன்ட் ரோவர் எவோக் ஆகிய மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் S, SE, HSE மற்றும்  HSE Luxury ஆகிய 4 வேரியண்டுகளில் கிடைக்கும். HSE Luxury வேரியண்டில் செனான் முகப்பு விளக்கு, தோல் இருக்கை, உயராம் மாற்றக்கூடிய இருக்கை மற்றும் 17 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் என பல விதமான சொகுசு உபகரணங்கள் கிடைக்கும். 

இந்த மாடல் 2.2 லிட்டர் என்ஜினில் இரண்டு வித திறனில் கிடைக்கும். 2.2 லிட்டர் TD 4 எஞ்சின் 150 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும்  2.2 லிட்டர் SD 4 190 bhp திறனையும் 400 Nm இழுவைதிரனையும் வழகும். இதன் அனைத்து  மாடலிலும் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்  கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் விலை விவரம்:

5 இருக்கை கொண்ட மாடல் 
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - S - 46.1 லட்சம் 
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - SE - 51.01 லட்சம்
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - HSE - 53.34 லட்சம்
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - HSE Luxury - 60.7 லட்சம்

7 இருக்கை கொண்ட மாடல் 
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - SE - 52.5 லட்சம்
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - HSE - 54.83 லட்சம்
லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் - HSE Luxury - 62.18 லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.