ரூ 53.18 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது லெக்சஸ் NX300h

லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் NX300h எனும் ஹைபிரிட் SUV மாடலை ரூ 53.18 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் லக்சுரி மற்றும் F ஸ்போர்ட் என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இதன் லக்சுரி வேரியன்ட் ரூ 53.18 லட்சம் விலையிலும் F ஸ்போர்ட் வேரியன்ட் ரூ 55.58 லட்சம் விலையிலும் கிடக்கும். இந்த மாடலின் முன்பதிவு ஏற்கனவே அணைத்து ஷோரூம்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் விநியோகம் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் RX450h எனும் SUV மாடலின் அடிப்படையில் அதைவிட சிறிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் மற்ற லெக்சஸ் மாடல் போலவே அனைத்து விதமான சொகுசு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 10.3 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், 14 ஸ்பீக்கர் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம், பனோராமிக் சன் ரூப், எட்டு காற்றுப்பை, ABS, டிராக்சன் கன்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ES 300h செடான் மாடலில் உள்ள அதே 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மின் மோட்டோரும் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் திறன் சிறிது டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் உள்ள எஞ்சின் மற்றும் மின் மோட்டர் இரண்டும் இனைந்து 194 Bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் லெக்சஸ் நிறுவனத்தில் eCVT எனும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLC, BMW  X3 மற்றும் ரேஞ் ரோவர் எவோக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.